2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விஞ்ஞான எழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை பிராந்;திய கல்வி அலுவலகத்தின் முன்னாள் விஞ்ஞான உதவிக்கல்விப் பணிப்பாளரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான காலஞ்சென்ற செல்வி குணபூசனி சதாசிவத்தின் ஞாபகார்த்த நிதியத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான எழுத்துப் போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருக்கோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட குச்சவெளி, தம்பலகாமம், திருகோணமலை கோட்ட பிரிவிக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கே மேற்படி விருதுகள் இன்று திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எ.எப்.ஜி. லூயிஸ், திருகோணமலை பெருந்தெரு விக்ணேஸ்வரா மகா வித்தியாலய முன்னால் அதிபர் நா.இராஜநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.

திருக்கோணமலை வலயத்திற்குட்பட்;ட 40 பாடசாலைகளைச் சேர்ந்த, 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 2000 மாணவர்கள் சென்றமாத நடுப்பகுதியில் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்கள் மத்தியிலிருந்த 590 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் 400 பேருக்கு விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அதிஉயர் புள்ளிகளைப் பெற்ற 25 மாணவர்கள் மத்தியிலிருந்து 15 பேருக்கு தலா ரூபா 5,000 பணப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்ட அதேவேளை, மிகுதிப் 10 பேருக்கு தலா ரூபா 1,000 பணப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந் ஞாபகார்த்த நிதியம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்கமைப்பிலும் செல்வி சதாசிவத்தின் பெறா மகன் சி.மனோகரனின் நிதி அனுசரணையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • ilakumanan Thursday, 08 December 2011 01:11 PM

    மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X