2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
 
திருகோணமலை, கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை கல்லூரி மஹ்ரூப் கலையரங்கில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.உபைத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எஸ்.ஏ. சராப்தீன், ரீ.பி.ஜாயா வித்தியாலய அதிபர் எம்.எம்.முஸம்மில், அல்-றவ்ளா வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், கடந்த காலங்களில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களும் அதற்கு வழிவகுத்த ஆசிரியர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X