2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாசிப்பு வாரத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

வாசிப்பு மாதத்தையொட்டி கிண்ணியா நகர சபையினரின் அனுசரணையுடன் கி;ண்ணியா பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட வாசிப்பு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், இறுதி நிகழ்வான அறிவுக் களஞ்சியப் போட்டியும் நேற்று வியாழக்கிழமை மாலை கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிண்ணியா நகர சபைத் தலைவர் டொக்டர்.எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், உதவித் தவிசாளர் எம்.சீ.சபறுல்லா மற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் இறுதிப் போட்டியான அறிவுக் களஞ்சியப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கும், கிண்ணியா அல்-ஹிறா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளுக்குமிடையே இடம் பெற்றது. இதில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றியீட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X