Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
A.P.Mathan / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோணேசப் பெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த திருக்கோணேஸ்வரத்தில் 33 அடி உயரமான சிவன்சிலை அமைக்க கடந்த 15.12.2010ஆம் திகதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழும் மங்கலகரமான கர வருடம் கார்த்திகை மாதம் 29ஆம் நாள் (15.12.2011 -வியாழக்கிழமை) காலை 9.30 மணியிலிருந்து 10.00 மணிவரையுள்ள சுப நேரத்தில் சிவன்சிலையும், வரலாற்றுப் பெருமைமிக்க 'இராவணன் வெட்டிற்கு' அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபமும் திறந்து வைக்கப்பட இருப்பதாக கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் செயலாளர் க.அருள்சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே ஆலய பரிபாலன சபையின் செயலாளர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...
பெருமானின் சிலை திறப்பு விழாவினை கீழ்க்காணும் பெரியார்கள் மங்கல விளக்கேற்றி தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
இச்சிலையினை அமைப்பதற்கு பெருமனதுடன் நிதி அனுசரணையளித்த கொழும்பு 12 இனைச் சேர்ந்த சுப்பிரமணியம் உதயகுமார், திருகோணமலையின் மூத்த ஆன்மீகப் பெரியார்களான பொன்னம்பலம் கந்தையா (காந்தி ஐயா), இளையதம்பி சண்முகராசா (தொண்டர் ஐயா), நாகராசா கணபதிப்பிள்ளை ஆகியோர் இச்சிலை திறப்பு வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இச்சிறப்பு வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு கோணேசப் பெருமானின் திருவருளைப் பெற்றேகுமாறு கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் தலைவரும் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை உறுப்பினர்களும் வேண்டிக் கொள்கிறார்கள் என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
32 minute ago