Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை மாலை பொதுவைத்தியசாலையின் கூட்ட அறையில் இடம்பெற்ற வைத்தியசாலைக் குழுவின் விசேட கூட்டத்தில் குழுவின் புதிய தலைவராக என்.கைலைநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
அதனை அடுத்து புதிய செயலாளராக எஸ்.கீதபொன்கலனும், உபதலைவராக கிழக்கு மகாணசபை உறுப்பினர் நிமல் காமினி ஹேவாவித்தாரனவும் பொருளாளராக ஆர்.மகேந்திரனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதுவரை வைத்தியசாலை குழுவின் தலைவராக கடமையாற்றிய பொறியியளாலர் அ.சிவகுமார் வேலைப்பளு காக்ரணமாக பதவியிலிருந்து விலகியதை அடுத்து பதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கு மகாணசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஓரே பொது வைத்தியசாலை திருகோணமலை பொதுவைத்தியசாலையாகும். இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளில் வைத்தியசாலைக்குழு கடந்த பல வருடங்களாக பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது.
அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்த குழுவினர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
அரசாங்க சுகாதார கட்டளைச் சட்டத்தின் கீழ் அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சர்களினால் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும்; குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sivanathan Tuesday, 13 December 2011 01:54 AM
கீதபொன்கலன் மாஸ்ரர் இல்லாத அமைப்பக்கள் திருமலையில் ஏதும் உண்டா. அரசியலுக்கு பிரவேசம் செய்ய இதனை வாய்ப்பாக பயன்படுத்துகிறாரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
33 minute ago