2025 மே 07, புதன்கிழமை

புதிய வைத்திய பராமரிப்பு நிலையம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்,எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சேனையூரில்  ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.எஸ்சுபைரினால் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 11.6 மில்லியன் ரூபா நிதியுதவியில் இந்த வைத்திய பராமரிப்பு   நிலையத்துடன் வைத்தியர்கள் தங்குவதற்கான விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு மாகாணத்தில் சுகாதார வைத்திய நிலையங்களை அமைப்பதற்கு  134 மில்லியன் ரூபாவை  ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இதேவேளை, மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் கிராமத்திலும்  சுகாதார பராமரிப்பு  நிலையம் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்எஸ்.சுபைரினால் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சர்வோதயம் இதனை  அமைத்துக் கொடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X