Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மனித உரிமைகள் பிரிவினால் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று செவ்வாய் கிழமை எகெட் கரித்தாஸ் நிறுவன கேட்போர் கூடத்தில் சிறப்பிக்கப்பட்டது. சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சமூகக்குழுக்களுக்கிடையிலான மனித உரிமைகள் தொடர்பான வீதி நாடகப்போட்டிகள் அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்விற்கு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய திட்டமிடல் உத்தியோகஸ்தர் திருமதி. மதியாபரணம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கலாசார உத்தியோகஸ்தர் அன்பழகன், மற்றும் திருகோணமலை வலயக்கல்வி பணிமனையில் முன்பள்ளி கல்விப்பணிப்பாளர் தவநாதன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வு மனித உரிமைகள் பிரிவின் இணைப்பாளர் செல்வி க. சூரியகுமாரி தலைமையில் நடைபெற்றது.
இவ்வேளையில் உரையாற்றிய பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், காலத்தின் தேவையை அறிந்து அதற்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனமாக எகெட் கரித்தாஸ் விளங்குகின்றது. அந்த வகையில் மனித உரிமை என்ற விடயம் பற்றி நாம் அனைவரும் அறிந்து இருக்க வேண்டிய விடயமாகும்.
அந்த வகையில் கிராம மட்டங்களில் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் வீதி நாடகம் மூலம் அவர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான பல தகவல்களை வழங்க முடியும் என்பதற்காகவே இந்த வீதி நாடகபோட்டி நடாத்தப்படுகின்றது என்றும் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.
எம்மை அறியாமலோ பல மனித உரிமைகள் மீறப்படுகின்றது சமூகத்தில், வீட்டில், பாடசாலையில், வேலைசெய்யும் அலுவலகத்தில் என பல இடங்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
31 minute ago