2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அரசியலுக்கு வர நாம் தயார், எம்மை ஏற்க கட்சிகள் தயாரா? : பெண்கள் கேள்வி

Kogilavani   / 2012 ஜூலை 22 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

'பெண்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஊடகங்களுடன் கைகோர்ப்போம்' எனும் தலைப்பிலான   சந்திப்பு  இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சில்வெர் ஸ்டார் விடுதியில் நடைபெற்றது.  இதனை  சமூக  அபிவிருத்திக்கான  ஆய்வு  நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

எதிர்வருகின்ற காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற தேர்தல்களில் களம் இறங்கத் தயாராக இருப்பதாக கூறும் 30 யுவதிகள் இதில் பங்கு கொண்டு, 'அரசியலுக்கு வர நாம் தயார் எம்மை ஏற்க  கட்சிகள் தயாரா? ஏன கேள்வி எழுப்பினர்.

யூஸ்எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை பட்டணமும் சூழலும், குச்சவெளி ஆகிய பிரதேச  செயலாளர் பிரிவுகளில் இருந்து தலா 15 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் தலா இரண்டு பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற  விதமாக  தயார் படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு  ஒரு வருட காலம் அரசியல் பயிற்சிளும் வழங்கப்பட்டிருந்தன.

எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட தாங்கள் தயாராக  இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர். பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் மேற்படி பெண்களின் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதும் இச்சந்திப்பின் பிரதான  நோக்கமாக  இருந்தது.

அடுத்த மாதம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை  அழைத்து இப் பெண்களை அறிமுகம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X