2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

உலர் உணவு பொருட்கள் வழங்கல்

Super User   / 2012 ஜூலை 23 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் இக்பால் நகர். அடம்போடை, நிலாவெளி, கோபாலபுரம், வாழையுற்று ,இரக்கண்டி, குச்சவெளி,ஜாயா நகர் மற்றும் வடலிக்குளம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 45 வறிய குடும்பங்களுக்கு தலா 4,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதனை  முஸ்லிம் எய்ட் பிராந்திய முகாமையாளர் ஏ.ஏ.ஜஸீர் பெடோ நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.பி.நஜிமுதீன் செயலாளர் ஏ.எல்.றபாய்தீன பாபு ஆகியோர் வாழையுற்று பள்ளிவாசல் தலைவருடன் இணைந்து வழங்கி வைத்தனர்.\



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X