2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் வெலிக்கடை தியாகிகளுக்கு நினைவஞ்சலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 பேரின் 29ஆவது நினைவுதினத்தை ஒட்டி நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு அரங்கில் நினைவுச்சின்னத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுபவருமான  பரமலிங்கம் நித்தியானந்தம் தலைமை வகித்தார்.

அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமாக போட்டியிடுபவரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X