2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சியமைப்பே கிழக்கு தமிழர்களுக்கு தேவை: சி.தண்டாயுதபாணி

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தி மட்டுமல்ல. அதிகார பகிர்வுடன் கூடிய ஆட்சி அமைப்பே. இவ்வாறு சிங்காரவேலு தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மைவேட்பாளர் சி.தண்டாயுதபாணி திருகுகடலூர் பிரதேச  மக்களை  மீனவர் அபிவிருத்த சங்க கட்டிடத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு இன்று வெளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அவர் அங்கு  தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு இன்று தேவையாக உள்ளது. அபிவிருத்தி கிடைத்தால் மட்டும் போதுமானது அல்ல. அரசாங்கம் தற்போது அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது. இது தேவைதான். ஆனால் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வே  தேவையாக உள்ளது.

நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள்.  எமது பிரதேசத்தை ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை  நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

இச்சந்திப்பில் வேட்பாளர்களான ஜனார்த்தனன், குமணன் ஆகியோரும் பங்கு கொண்டு கருத்துக்களை வழங்கினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X