2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரத்திலுள்ள முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செயகின்றனர்: சஜித் பிரேமதாச

Super User   / 2012 ஜூலை 30 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


இஸ்லாத்தின் பெயரை கூறிக்கொண்டு இந்த ஆட்சி அதிகாரத்துடன் ஒட்டிக்கொண்டுள்ள முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம்களுக்கு சமூகத்திற்கு துரோகம் செயகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்;ட போதும் தங்கள் பதவிகளையும் சுகபோகங்களையுமே உயர்வானவையாக மதித்தார்கள். இதுவா இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கை? ஏன அவர் கேள்வி எழுப்பினார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெடர்ந்து அவர் பேசுகையில்,

"அவ்வப்போது குர்ஆனை கூறி உங்களிடம் ஒரு முகத்தையும் கொழும்புக்கு ; சென்று ஜனாதிபதியைச் சந்தித்தால் வேறொரு முகத்தையும் காட்டுகின்ற முஸ்லிம் தலைவர்களை நம்பாதீர்கள். இவர்கள் இங்கு வீறாப்பு பேசுவார்கள். அங்கு ஜனாதிபதியை சந்தித்தால்  புலியைக் கண்ட ஓநாய் மாதிரி ஒடுங்கி நடுங்கி சுருண்டு விடுகிறார்கள்.

இவர்களா உண்மையான முஸ்லிம் தலைவர்கள்? இவர்கள் உண்மையான முஸ்லிம் தலைமைகள் என்றால் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்படும் போது அமைச்சு பதவிகளையும் சுகபோகங்களையும் தூக்கி எறிந்திருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தம்புள்ள நகரில் சகல வசதிகளுடன் கூடிய பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணித்துத் தருவேன்.

இதன் மூலம் இன்று இந்த நாட்டில் இனங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற மத ரீதியான பிளவுகளை ஒழித்து எல்லா சமயங்களையும் எல்லா சமயத்தவர்களும் மதித்து போசிக்கின்ற ஒரு புதிய கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவேன். எனது தகப்பன் ஒரு சிறந்த பௌத்தவராக இருந்தும் கூட சகல சமயங்களையும் சமமாக மதித்தார். இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ கலாசார அமைச்சுக்களை அமைத்தார். ஆனால் இன்று சமயங்களுக்கிடையே பகை உணர்வுகளை உருவாக்கி அரசியல் செய்வதற்கு வழிதேடுகிறார்கள்.

சரியான கொள்கையும் திட்டமும் இல்லாத காரணத்தினால் இந்த நாட்டில் கல்வி இன்று சீர்குலைந்துள்ளன. ஆயிக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்புக்களை இழந்து வீதிக்கு இறங்கியுள்ளார்கள். இரண்டு கல்வி அமைச்சர்கள் உள்ளர்கள் அவர்களுக்கு தலையில் இருந்து கால் வரைக்கும் முளையாம். அதன் காரணமாகவே பரீட்சை முடிவுகளை இரண்டு முறை அறிவித்தார்களாம்.

இரண்டு கல்வி அமைச்சர்களையும் ஜனாதிபதி அழைத்து இந்த குழப்ப நிலைக்கு காரணம் எது வென்று வினவி இன்னுமொரு முடிவை அறிக்கச் சொல்லியிருக்கிறாராம். திருடனின் தாயிடம் போய் சாஸ்த்திரம் பார்த்தது போன்றதொரு கதையாகும் இது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்களாகியும் கிழக்கு மாகாணத்தித் மீன் பிடிக்க பாஸ் நடைமுறையே இன்றும் இருக்கின்றது. காடுகளுக்குச் சென்று விறகு, கீரை வகைகளை எடுத்து வருபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்.

நல்லாட்சியும் சட்ட ஆட்சியும் இன்று சீர் குலைந்துள்ளன. இந்த நாட்டுக்கு இன்று அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுவது இவையே. இந்த கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய ஆட்சியை  உருவாக்குவதற்கு செப்டம்பர் எட்டாம் திகதி ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Nazeem Tuesday, 31 July 2012 06:53 AM

    இஸ்லாத்தை வைத்து சமுகத்தினை ஏமாற்றி வருபவர்களுக்கு ...........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X