2025 மே 10, சனிக்கிழமை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுகவீன விடுமுறைப் போராட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 29 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி சுகவீன விடுமுறைப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கான அழைப்பை அந்த சங்கம் விடுத்துள்ளது.

இதற்கு  இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அனைத்து இலங்கை  ஐக்கிய ஆசிரியர் சங்கம்,  தேசிய கல்விச் சேவையாளர் சங்கம் உட்பட 13  தொழில்ச் சங்கங்கள் ஆதரவு நல்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட  அதிபர், ஆசிரியர்களின்  இடைக்கால சம்பளத் திட்டத்திற்கு அமைய நிலுவையுடனான  சம்பளத்தை உடன் வழங்கு,  அதிபர், ஆசிரியர்கள் பதிவு உயர்வுகளை தாமதம் இன்றி வழங்கு, நிலுவைச் சம்பளம்  இடர்காலக் கடன், வீடமைப்புக்  கடன்,  அதிபர், ஆசிரியர்களுக்கு உரித்தான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதியளவு  நிதியை ஒதுக்கீடு செய்,  மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலவசக் கல்விக்கான பாதுகாப்பை  உறுதிசெய், கல்வித்துறை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து, ஆசிரிய  இடமாற்றக் கொள்கையை  அமுல்படுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்திற்கு  அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X