2025 மே 10, சனிக்கிழமை

அத்து மீறிய நெற்செய்கையை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள படுகாடு, மதலைமடு போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்து மீறிய நெற்செய்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி  கிழக்கு  மாகாண விவசாயத்துறை அமைச்சருக்கு  திருகோணமலை நகர சபை உறுப்பினர் நந்தகுமார் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் பிரதிகள் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.


'கங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள படுகாடு, முதலைமடு போன்ற வயற்காணிகளில் கங்குவேலி, பட்டித்திடல் போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்செய்கையை காலம்காலமாக  மேற்கொண்டு வந்தனர்.

தற்பொழுது பெரும்போகச் செய்கைக்கான வயல்களை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ள முயன்ற போது பெரும்பான்மை இன விவசாயிகள் இக்காணிகளில் அத்துமீறி நுழைந்து தமிழ் கிராம மக்கள்; பயன்படுத்திய வயல்களில் செய்கையை மேற்கொள்கின்றனர்.

நெற்காணிகளுக்கான உரித்தாவணங்களுடன் இந்த விடயத்தை மூதூர் பொலிஸாருக்கும் மூதூர் பிரதேச  செயலக அதிகாரிகளுக்கும் தெரிவித்த போதம் ஆக்கபுர்வமான நடவடிக்கை எதுவும் சம்பந்தப்பட்ட தரப்பினால் மேற்கொள்ளப்படவில்லை என கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஆக்கபுர்வமான நடவடிக்கை எடுத்த தமிழ் விவசாயிகள் தமது சொந்த நிலங்களில் பயிர் செய்கையை மேற்கொள்ள ஆவண செய்வதோடு இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஏழை தமிழ் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X