2025 மே 10, சனிக்கிழமை

ரயிலில் பயணித்த பயணி மின்கம்பத்தில் மோதுண்டு பலி

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)
திருகோணமலையிலிருந்து கொழும்பை நோக்கி வந்துக்கொண்டிருந்த   ரயிலில்,  பயணித்த பயணியொருவர் மின்கம்பத்தில்  தலை மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலில்  இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிண்ணியா மாலிந்தரைப் பிரதேசத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஜப்பார்- முஹம்மது பதகிர் (வயது-18) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சிறுவன் தொழிலுக்காக கொழும்பு நோக்கி வரும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X