2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'சொகுசு வாழ்க்கையை தேடியே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்கின்றனர்'

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன், எம்.பரீத்


'கிழக்கு மாகாணத்தில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. உயிர் உடமைகளுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். படகுகளில் சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் பணம் உள்ளவர்கள். அவர்கள் சொகுசு வாழ்க்கையை தேடிச்செல்பவர்கள்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய நாட்டின் சுங்கம் மற்றும் எல்லைப்புறப் பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சூனைட் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகுகளில் வருபவர்களில் அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவுஸ்திரேலிய நாட்டின் சுங்கம் மற்றும் எல்லைப்புறப் பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சூனைட் முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் அவ்வாறு அகதிகளாக வருவதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.
இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

'சட்டவிரோதமாக படகுகளில் செல்வதை தடுக்கும் நோக்கில் கிழக்கு மக்கள் மத்தியில் முப்படைகளின் அனுசரணையுடன் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பில், திருமதி சூனைடுடன் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரி கிறிஸ்டொபர் வூட்ஸும் முதலமைச்சரின் ஆலோசகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாஹிரும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • m.sountharajan Thursday, 14 February 2013 05:34 PM

    கிழக்கு மாகாணத்தில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. உயிர் உடமைகளுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார். அப்படியானால் அண்மையில் மூதூரில் கைது செய்யப்பட்டவர் பற்றி என்ன கூறுகின்றார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X