2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அதிபர் தரமுள்ளவர்களுக்கு பாடசாலை பொறுப்புகள் வழங்கக் கோரிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 26 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

போட்டிப் பரீட்சைகள் மூலம் இலங்கை அதிபர் சேவை தரம் பெற்றவர்களுக்கு பாடசாலைப் பொறுப்புகளை வழங்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிண்ணியா கல்வி வலயத்தில் அதிபர் தரம் பெற்ற பலர் பாடசாலைப் பொறுப்புகள் இன்றி இருக்கின்றனர். அதேவேளை அதிபர் தரம் இல்லாதவர்களுக்கு பாடசாலைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பம்  கோரப்படாமலும் நேர்மூகப் பரீட்சை நடத்தப்படாமலுமே அதிகமான அதிபர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது தரம் பெற்ற அதிபர்களுக்கு இழைக்கப்பட்ட அநிதியாகும்.

எனவே தரம் பெற்ற அதிபர்கறுளுக்கு பாடசாலைப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமென்று அவர் மேலும் குறிப்பட்டுள்ளார். இக்கோரிக்கையின் பிரதியொன்று கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X