2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய குச்சவெளி பொலிஸார் தேடுதல்

Super User   / 2013 மார்ச் 03 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

மோட்டார் சைக்கிளினால் சிறுமியை மோதி விட்டு தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக குச்சவெளி பொலிஸார் தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை – புல்மோட்டை வீதியின் இறக்கக் கண்டி - வாழையூற்று பிரதான வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீதியைக் கடந்த சென்ற மூன்று வயதுச் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த மதியழகன் விதுசா, நிலாவெளி கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக  சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் குச்சவெளி 6ஆம் கட்டை கும்புறுப்பிட்டி பகுதியை நோக்கிச் தப்பிச் சென்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமியின் நிலமை மோசமாக இருப்பதாகவும் குச்சவெளிப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளதோடு தலைமறைவானவரை தேடித் வீதிச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X