2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இந்த நாடு எந்தவொரு இனத்திற்கும் சொந்தமானது என ஜனாதிபதி சொல்லவில்லை: ஹஸன் மௌலான

Super User   / 2013 மார்ச் 03 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

இந்த நாடு எந்தவொரு இனத்திற்கும் சொந்தமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்லவில்லை. எல்லா மதங்களையும் மக்களையும் ஜனாதிபதி நேசிக்கின்றார் என ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் ஹஸன் மௌலான தெரிவித்தார்.

திருகோணமலை முற்றவெளி செய்யது மரைக்கார் மௌலானா சியாரம் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு மற்றும் அன்னதான நிகழ்வு ஆகிய விசேட நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹஸன் மௌலானா கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்று சகல மக்களையும், சகல மதங்களையும் நேசிக்கும் ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான். இன, மத வேறுபாடு இன்றி எதிர்கட்சியினரையும் அவர் நேசிக்கின்றார். இந்த நாட்டை நாட்டை நேசிப்பவர் மற்றது நாட்டை நேசிக்காதவர் ஆகிய இரு இனங்களே உள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 10க்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை குழப்புவதற்காகவே இன்று முஸ்லிம்களின் மீது பல தரப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றனர்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X