2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு 28 பஸ் வண்டிகள்

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன்  கியாஸ், அப்துல் பரிட்

அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில்  பயணிகளின் நன்மை கருதி இம் மாவட்டத்தில் உள்ள இலங்கைப் போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு  28  பஸ் வண்டிகளை பெற்றுக் கொடுக்க உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த பஸ் வண்டிகள் தற்போது கிண்ணியா பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றில்  மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேச டிப்போக்களுக்கு தலா ஆறு பஸ் வண்டிகளும் ஏனையவை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இவற்றை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .