Princiya Dixci / 2022 ஜூலை 22 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர், தீஷான் அஹமட்
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் கப்பல் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான காலம் சென்ற எம்.ஈ.எச்.எம்.மஹரூபின் 25ஆவது வருட நினைவு தின நிகழ்வும், துஆ பிரார்த்தனையும், கிண்ணியா குறிஞ்சாக்கேணி தாருல் உலூம் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (21) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இம்ரான் மஹரூபின் ஆலோசனைகளுக்கு அமைய, இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா மீனவர் சமாஜத்தின் தலைவர் எம்.பாயிஸ், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூபின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம் மற்றும் மௌலவிமார்கள் பலர் கலந்துகொண்டனர்.
எம்.ஈ.எச்.மஹரூப் , 1997.07.20ஆம் திகதி நிலாவளி பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இன்னும் நால்வரும் படுகொலை செய்யப்பட்டனர்.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025