2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

39 பேருக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கல்

Super User   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

 
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் 39 பேருக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

திருக்கோணமலையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிழகவின்போதே இந்நியமனம் வழங்கப்பட்டது.

இந்நியமணம் கடந்த 2010 ஆண்டு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப்; பரீட்சையில் சித்தியடைந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ஆகிய மூன்று இனங்களைச் சேர்ந்த 39 பேருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நிகழ்வின் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் டபிள்யூ.ஜீ.எம்.ஆரியவதி கலப்பதி, மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எம்.சீ.எம்.சரீப், அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X