Janu / 2025 நவம்பர் 05 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் தொடர் சத்தியாக் கிரக போராட்டமானது செவ்வாய்க்கிழமை (04) அன்று 49 வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்தது.
தங்களது விவசாய நிலத்தை அபகரித்து தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இந்த சத்தியாக் கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் அலுவலகம் வரை போராட்டங்களை நடாத்தியும் உரிய காலப் பகுதிக்குள் தீர்வை தருவதாக பிரதமர் கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை பிரதமரால் வழங்கிய கால அவகாசமும் முடிவுற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம் விவசாயிகளை எவ்வாறு வழி நடத்துவது தங்களுக்கு கவலையளிப்பதாக முத்து நகர் விவசாயிகள் கூறுகின்றனர்
மேலும் “அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தை மீள பெற்றுத் தாருங்கள் ” என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஏ.எச் ஹஸ்பர்

6 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
15 Nov 2025