2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பறவை பூங்காவின் உரிமையாளர் கைது

Editorial   / 2025 ஜூலை 17 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல நாட்களாக பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த  சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டு இன்று (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னதாக, பறவை பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் இருந்து எட்டு சொகுசு பைக்குகள் மற்றும் நான்கு முச்சக்கர வண்டி வகை மோட்டார் சைக்கிள்கள் உட்பட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பூங்காவின் மேலாளர் மற்றும் களஞ்சிய  மேற்பார்வையாளர் முன்பு கைது செய்யப்பட்டு ஜூலை 25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமாகும், மேலும் சந்தேக நபர்கள் சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X