2021 மே 08, சனிக்கிழமை

போதைப்பொருள் கடத்திய சகோதரிகளுக்கு விளக்கமறியல்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரிகள் இருவரையும், எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தங்கல்ல நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

தங்கல்ல குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, 19 மற்றும் 25 வயதுடைய இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடமிருந்து, 5.5 மில்லிகிராம் ஹெரோய்ன், 81,190 ரூபாய் பணம், 4 அலைபேசிகள், 90,000 ரூபாய் வைப்பு செய்யப்பட்ட பணத்துக்கான ரசீது போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, இவர்கள் மோட்டார் சைக்களில் ஒன்றில் பயணம் செய்துக்கொண்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில், நீண்ட நாட்களாக, போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள வந்துள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக, ஏற்கெனவே நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X