Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டம், எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுகல, எல்ல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி மற்றும் ரவைகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை இன்று புதன்கிழமை (09) எல்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
15 minute ago
29 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
51 minute ago
1 hours ago