Menaka Mookandi / 2011 ஜனவரி 04 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.மன்சூர்)
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு தொகை தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கொள்ளைக் கோஷ்டிக்கு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் ஒருவரே தலைமை தாங்கி வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
காலி மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பலாங்கொட, ஹிக்கடுவ, கரங்தெனிய உள்ளிட்ட ஆறு பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் மேற்படி சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிள்கள் மூலம் மேற்படி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காலி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago