2025 மே 01, வியாழக்கிழமை

20க்கு தென் மாகாணத்திலும் தோல்வி

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் இன்று தென் மாகாண சபையில் 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக எவரும் வாக்களிக்காத நிலையில் சட்டமூலத்திற்கு எதிராக 27 பேர் வாக்களித்திருந்ததாக தென் மாகாண சபைத் தலைவர் சோமவங்ச கோதாகொட தெரிவித்தார்.

தென் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சந்தன பிரியந்த, செங்கோலை சபையிலிருந்து எடுத்துக்கொண்டு கழிவறையை நோக்கி ஓடிச்சென்றுள்ளார். இவரை ஒருசில உறுப்பினர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதன்போது உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் இடம்பெற்றதுடன் செங்கோலுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேலும் சில உறுப்பினர்கள் இணைந்து செங்கோலை சபையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சபை நடவடிக்கைகள் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .