Super User / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மித்தெனிய, ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாலடைந்த வீடொன்றுக்குள் பொலிஸாருக்கும் ஆயுத குழுவொன்றுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆயுததாரிகள், இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் மேலம் இரு ஆயுததாரிகள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆயுததாரிகளிடமிருந்து ரீ – 56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
23 minute ago
36 minute ago
39 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago
39 minute ago
53 minute ago