2021 ஜூன் 24, வியாழக்கிழமை

சுகமடைய வேண்டுதல்...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலைவரான ஸ்ரீ சத்ய சாய் பாபா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவரது உடல்நிலையில் இன்று காலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 86ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய ஸ்ரீ சத்ய சாய் பாபா சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் புட்டபர்த்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டள்ளதாகவும் நுரையீரலுக்குள் தண்ணீர் சென்றுள்ளதாகவும் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜே.ரட்னாகர் ரெட்டி கூறியிருந்தார்.


  Comments - 0

  • Sayan Thursday, 07 April 2011 08:39 AM

    சாய்ராம் ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .