2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

புதியதொரு பயணத்தை நோக்கி...

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த 176 யுவதிகள் உள்ளிட்ட 508பேர் நேற்று சனிக்கிழமை அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண,  புனர்வாழ்வு நிலையங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவாறு உயர்தர பரீட்சை எழுதியவர்களும் இதன்போது விடுவிக்கப்பட்டனர். விடுதலையானவர்களுடைய கலை நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Romesh Madushanka & Vivekarasa


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .