2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

அஷ்வின் - அன்டர்சன் மோதல்: 'ஏமாற்றமளிக்கிறது'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வினும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சனும், 4ஆவது டெஸ்ட் போட்டியில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டமை, ஏமாற்றமளிப்பதாக, இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டெயர் குக் தெரிவித்துள்ளார்.

4ஆவது நாள் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த அன்டர்சன், இந்திய அணித் தலைவர் விராத் கோலி, முன்னர் இங்கிலாந்தில் தடுமாறியதை விட, தற்போது முன்னேறியிருக்கிறார் எனத் தெரிவித்ததோடு, ஆசிய ஆடுகள நிலைமைகளால், அவரது நுட்பத் தவறுகள், வெளியே தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

மறுநாள் துடுப்பெடுத்தாட வந்த அன்டர்சனுக்கு அருகிலேயே நீண்ட தூரம் நடந்து வந்த அஷ்வின், அவருக்கு ஏதோ சொல்லிக் கொண்டு வந்தார். அந்நிலைமை தீவிரமடைய, நடுவரும் கோலியும் தலையிட வேண்டியேற்பட்டது.
"அது, மிகவும் கவலைதரக்கூடிய முடிவு. இந்தத் தொடர், எவ்வாறு நல்லுணர்வுகளின் அடிப்படையில் விளையாடப்பட்ட நிலையில், அந்தச் சம்பவம், ஏமாற்றமளிக்கிறது" என, குக் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .