2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஐ.பி.எல் இடைக்காலத் தலைவராக சிராயு அமீன் நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் அமைப்பின் இடைக்காலத் தலைவராக சிராயு அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அலெம்பிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவரான அமீன், பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். ஐபிஎல் அமைப்பின் கமிஷனராக இருந்து வந்த லலித் மோடி மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டதையடுத்து, நேற்று அவரை அந்தப் பதவியிலிருந்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கியது.இந்த நிலையில், அவர் இல்லாமலேயே, ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. இதில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர், துணைத் தலைவர், அருண் ஜேட்லி, செயலாளர் என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், ஐபிஎல் அமைப்பின் இடைக்காலத் தலைவராக சிராயு அமீன் நியமிக்கப்பட்டார். லலித் மோடி ஐபிஎல் அமைப்பின் "கமிஷனர்" என அழைக்கப்பட்டு வந்தார்.


  Comments - 0

 • majeed Monday, 26 April 2010 11:07 PM

  Mr.lalith modi is done the job wel and he is only the good leader to leads IPL.

  Reply : 0       0

  majeed Monday, 26 April 2010 11:08 PM

  lalith modi maddume athukku thahuthiyanawar ipl poaddikalai awar nanrahe seythar, avare athukku thahuthiyanawarum kooda, wel done Mr.Lalith modi

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .