Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்மாத ஆரம்பத்தில், மன்செஸ்டர் சிற்றி அணியின் மைதானமான எதிகாட் அரங்கில் இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சிற்றியின் வீரர்களும் செல்சியின் வீரர்களும் மோதிக் கொண்டனர்.
இந்நிலையிலேயே, செல்சி அணிக்கு 100,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும், மன்செஸ்டர் சிற்றிக்கு 35,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செல்சியின் டேவிட் லூயிஸை வீழ்த்தியமைக்காக மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அகுவேரோ வெளியேற்றப்பட்டத்தைத் தொடர்ந்தே, குறித்த போட்டியின் முடிவில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இரண்டு அணிகளும் மோதிக் கொண்டதில், செல்சியின் சீஸ்க் பப்ரிகாஸைப் பிடித்தத்துக்காக மன்செஸ்டர் சிற்றியின் பெர்ணான்டின்ஹோவும் வெளியேற்றப்பட்டிருந்தார். இப்போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றிருந்தது.
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago