2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஜேர்மன் கிண்ணத்தை வென்றது டொட்டமுண்ட்

Editorial   / 2017 மே 29 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே விலகல் முறையில் இடம்பெற்றுவந்த ஜேர்மன் கிண்ண இறுதிப் போட்டியில், பொரிசியா டொட்டமுண்ட் வெற்றிபெற்றுள்ளது. ஐன்ராட் பிராங்பேர்ட்டையே, இறுதிப் போட்டியில், டொட்டமுண்ட் வென்றுள்ளது.

புண்டெலிஸ்கா தொடரில் மூன்றாமிடம் பெற்ற டொட்டமுண்ட்டுக்கு, இந்த வெற்றி ஆறுதலாய் அமைந்தது. இத்தடவையுடன் சேர்த்து, நான்கு தடவைகள், ஜேர்மன் கிண்ண இறுதிப் போட்டியை பொரிசியா டொட்டமுண்ட் வென்றுள்ளது.  

இப்போட்டியின் எட்டாவது நிமிடத்தில், உஸ்மன் டெம்ப்பிளி பெற்ற கோலின் மூலம் டொட்டமுண்ட் முன்னிலை பெற்றது. பின்னர் 29ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற அன்டே றபிக், கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர், கிறிஸ்டியன் புலிசிக் வீழ்த்தப்பட, வழங்கப்பட்ட பெனால்டியை, போட்டியின் 67ஆவது நிமிடத்தில் பியரி-எம்ரிக் அபுமெயாங் கோலாக்க, 2-1 என்ற கோல் கணக்கில், இறுதியில் டொட்டமுண்ட் வென்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .