2021 ஜூலை 29, வியாழக்கிழமை

நடுவரைப் பதம்பார்த்த பந்து

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மும்பையில் இன்று ஆரம்பமான நான்காவது டெஸ்ட் போட்டியில் நடுவர்களுள் ஒருவராகக் கடமையாற்றிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த போல் றைபெல், தலையில் பந்து பட்டதன் காரணமமாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

போட்டியின் 49ஆவது ஓவரின் 2ஆவது பந்தை, இரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய போது, அந்தப் பந்தை, அறிடுக வீரர் கேட்டன் ஜெனிங்ஸ் அடித்தார். ஸ்குயார் லெக் திசை நோக்கிச் சென்ற அந்தப் பந்தை, புவனேஷ்வர் குமார் களத்தடுப்பில் ஈடுபட்டு, புஜாராவை நோக்கி எறிந்தார். ஆனால், அந்தப் பந்து, நடுவரின் பின்தலையைப் பதம் பார்த்தது.

உடனடியாகவே கீழே விழுந்த நடுவர், சில நிமிடங்களுக்குப் பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர், வைத்தியசாலைக்குச் சென்று, அவரது தலையில் ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள், இன்னமும் வெளியாகவில்லை.

3ஆவது நடுவரான மரையா எராஸ்மஸ், கள நடுவராக மாற, போட்டி தொடர்ந்து இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .