2021 மே 13, வியாழக்கிழமை

நியூஸிலாந்து அணி வெற்றி

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

நாணய சுழற்சியி் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம் சௌதி மற்றும் ஸ்கெட் குக்லைன் ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

162 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

கிராண்ட் ஹோம் 59 ஓட்டங்களையும் டொம் புரூஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அகில தனஞ்சய 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 க்கு 0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை வகிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .