2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 15 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரை இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடாத்தும் வாய்ப்பொன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கியுள்ளது.

எனினும் ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர்கால தொடர் அட்டவணையின் படி ஐக்கிய அரபு எமீரகத்திலேயே தொடரை நடாத்துமாறே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடிப் பதிலாக வழங்கியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும், இந்திய அரசாங்கத்திடமிருந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதியைப் பெற்றுள்ளதாகவும், தொடரை விளையாடுவதற்கு , பாகிஸ்தான், இந்தியாவுக்கு பயணமாகவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர், தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாகாரியார் கான் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சந்திக்கவில்லையென்றும் ஆனால், தான், ஷகாரியார் கானுடன் அலைபேசியில் கதைத்ததாகவும் அடுத்து வரும் இரு நாட்களில் மீண்டும் கதைக்கலாம் எனவும் ஷஷாங் மனோகர் தெரிவித்தார்.

மேற்படி விடயங்களை உறுதிப்படுத்திய இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர், தொடரொன்றை விளையாட பாகிஸ்தான், இந்தியாவுக்கு பயணமானால் மட்டுமே கிரிக்கெட் உறவுகள் மீண்டும் ஆரம்பமாகும் என்றும், பாகிஸ்தான், இந்தியாவில் தொடரை விளையாட சம்மதித்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அரசாங்கத்தை சந்திக்கும் எனவும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .