2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

றியல் – டொட்டமுண்ட் போட்டி சமநிலை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகளில், றியல் மட்ரிட், பொரிசியா டொட்டமுண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும், லயோன், செவில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தன. இதேவேளை, ஜுவென்டஸ், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

றியல் மட்ரிட், ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் முதற்பாதியின் 28ஆவது நிமிடத்தில் கோலொன்றினைப் பெற்ற றியல் மட்ரிட்டின் கரிம் பென்ஸீமா, இரண்டாவது பாதியின் 53ஆவது நிமிடத்திலும் கோலொன்றினைப் பெற்று தனது அணிக்கு உறுதியான முன்னிலையை வழங்கினார். எனினும், போட்டியின் 60ஆவது நிமிடத்தில் பியரி-எம்ரிக் அபுமெயாங் பெற்ற கோலினாலும், போட்டியின் 88ஆவது நிமிடத்தில் மார்க்கோ றோயஸ் பெற்ற கோலினால், டொட்டமுண்ட் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

இங்கிலாந்துக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யக் கழகமான சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணியைத் தோற்கடித்தது. சம்பியன்ஸ் லீக்கிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுள்ள டொட்டென்ஹாம், இப்போட்டியில் வென்றதன் மூலம் யூரோப்பா லீக்குக்கான தனது இடத்தை உறுதி செய்து கொண்டது.

இதேவேளை, சம்பியன்ஸ் லீக்கின் விலகல் முறையிலான சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள இங்கிலாந்துக் கழகமான லெய்செஸ்டர் சிற்றி, 5-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் கழகமான எஃப்.சி போர்ட்டோவிடம் படுதோல்வி அடைந்திருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்ற போர்ட்டோ, சம்பியன்ஸ் லீக்கின் அடுத்த சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .