2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

20 வருடங்களாக நம்பமுடியாத வகையில் சச்சின் விளையாடுகிறார்: கபில்

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 20 வருடங்களாக சச்சின் டெண்டுல்கர் நம்பமுடியாத மேலும் சிறப்பாக விளையாடி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் கூறியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த அணித்தலைவரான கபில்தேவ் லண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய அணியின் வெற்றியின் இரகசியம் குறித்து கபில் தேவிடம் கேட்டபோது, ' இந்தியா ஒவ்வொரு விளையாட்டிலும் வளர்ந்துவருகிறது. பொதுநலவாய போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலககக்கிண்ணம் என நிச்சயமாக ஒவ்வொன்றிலும் நாம் உயரே பறக்கிறோம். உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இருப்பதோடு உலக சம்பியனாகவும் இப்போது இந்தியா விளங்குகிறது.

நாம் பணத்தை கொட்டினோம். எம்மால் சிறப்பாக விளையாடவும் முடியும் என காட்டியிருக்கிறோம். ஆனால் உயர்ந்த நிலைக்கு செல்லும்போது மனநிலையும் மாறிவிடும்' என கபில்தேவ் பதிலளித்தார்.

இந்திய அணி இறுதிப்போட்டியை நோக்கிச் சென்றபோது தடுமாறியது ஏன் என கபில்தேவிடம் கேட்கப்பட்டது.

'பலமான துடுப்பாட்ட வரிசை அமையும்போது சிலவேளைஅசட்டையீனம் குடிகொள்ளும். நாம் வெற்றிபெற்ற போதும் அவர்கள் சாதித்ததைவிட அவர்கள் மிக சிறந்த வீரர்கள். டோனிகூட மிக அவசியமாக தேவைப்பட்ட இறுதிப்போட்டியில்தான் சிறப்பாக விளையாடினார்' என கபில்தேவ் பதிலளித்தார்.

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக்கையும் கபில் பாராட்டினார். அவர் அச்சமற்ற வீரர் அவர் கிரிக்கெட்டின் பரிமாணத்தை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார்' என கபில் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .