2021 ஜூன் 19, சனிக்கிழமை

விமானப்படை அதிகாரியானார் டெண்டுல்கர்

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய விமானப் படையில் கௌரவ குறூப்  கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் துறையில்  டெண்டுல்கரின் மாபெரும் சாதனைகளை கௌரவிக்கும் முகமாக அவருக்குப் இப்பதவி வழங்கப்படடுள்ளது.

நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் இந்திய விமானப் படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் பி.வி. நாயக், டெண்டுல்கருக்கு இப்பதவியை வழங்கி கௌரவித்தார்.

இப்பதவி வழங்கப்பட்டமைகுறித்து தான் பெருமையடைவதாகவும் இப்பதவி மூலம் இந்திய விமானப்படைக்கு தான் கடமைப்பட்டுள்ளதாகவும் டெண்டுல்கர் கூறினார்.

இளைஞர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள  சச்சின் டெண்டுல்கர், இந்திய விமானப்படையில் பதவி பெற்றுள்ளமை ஏராளமான இளைஞர்கள் இந்திய விமானப்படையில் இணைய வழிவகுக்கும் என எயார் சீவ் மார்ஷல் பி.வி. நாயக் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையில் ஒன்பது தரங்களைக் கொண்ட அதிகாரி மட்டத்திலான வரிசையில் 'குறூப் கேப்டன்' பதவி ஐந்தாவது இடத்தை பெறுகிறது. நாட்டிற்காக சிறப்பாக பணி புரிபவர்களை கவுரவப் படுத்தும் வகையில், இந்திய பாதுகாப்புப் படை சார்பில் கௌரவப் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு முன் 1944இல் ஜவஹர் ராஜா யஷ்வந்த் ராவ் (பிளைட் லெப்டினன்ட்), 1974இல் தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா (ஏர் வைஸ் மார்ஷல்) உள்ளிட்ட 21 பேர்களுக்கு கௌரவ பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 198 3இல் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கபில் தேவுக்குஇ இந்திய இராணுவப் படை சார்பில் கடந்த 2008 இல் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .