2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்க மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் முத்தையா முரளிதரன்

Super User   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளில்  இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'டைட்டான்ஸ்' எனும் கழகம் முத்தையா முரளிதரனை தனது அணியில் இணைந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளதாக தென்னாபிரிக்க தினசரியான 'பிளீட்' தெரிவித்துள்ளது.

சென்சூரியன் நகரைத் தளமாகக் கொண்ட இக்கழகம், மாகாண அணிகளுக்கிடையிலான 20 ஓவர் சுற்றுப்போட்டியில் முரளிதரனை தனது அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது.

38 வயதான முத்தையா முரளிதரன், தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் ட்வெண்ரி 20 சுற்றுப்போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் சார்பில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .