2021 ஜூன் 19, சனிக்கிழமை

அமெரிக்கப் பகிரங்கத் தொடரில் கிளிஜ்ஸ்டர்ஸ் மீண்டும் சம்பியன்

Super User   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் நடப்புச் சம்பியனான பெல்ஜிய வீராங்கனை கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் மீண்டும் சம்பியனாகியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை வேரா ஸ்வோனெரேவாவை 6-2, 6-1 விகிதத்தில் கிளிஜ்ஸ்டர்ஸ் தோற்கடித்தார்.  59 நிமிடங்களில் இப்போட்டி முடிவுற்றது.

1980 ஆம் ஆண்டின் பின்னர் மிகக்குறுகிய நேரத்தில் முடிவுற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி இதுவாகும்.

அமெரிக்கப் பகிரங்கத் தொடரில் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் சம்பியனாகியமை இது மூன்றாவது தடவையாகும். 27 வயதான கிளிஜ்டர்ஸ் ஏற்கெனவே 2005, 2009 ஆம் ஆண்டுகளிலும் சம்பியனாகியிருந்தார்.

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .