2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

ஆட்டநிர்ணய சதி; வீரர்களின் செயற்பாடுகள் அவதானிக்கப்படுகின்றன: பாக் அமைச்சர்

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஆட்டநிர்ணய சதிக்கு இடம்கொடுக்கக்கூடாது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மலிக் எச்சரித்துள்ளார்.

'சூதாட்டம் நடைபெறக்கூடாது என நான்அவர்களை எச்சரித்துள்ளேன். அவர்களை நான் உன்னிப்பாக அவதானித்து வருகிறேன். அப்படி  ஏதேனும் நடந்தால் நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அமைச்சர் ரெஹ்மான் மலிக் கூறினார்.

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கி;ண்ணண அரையிறுதிப் போட்டி நாளை மறுதினம் புதன்கிழமை மொஹாலி நகரில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் தூய்மையானவர்கள் என்பது தனக்கு உறுதியாகத் தெரியும் என்ற போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குறித்து புலனாய்வு தகவல்கள் திரட்டப்படுவதாக அவர் கூறினார். அவ்வீரர்கள் யாரை சந்திக்கிறார்கள், தொலைபேசி உரையாடல்கள் என்பன குறித்த விபரங்களும் இதில் அடங்கும்.

'இது அவசியமானது. ஏனெனில் லண்டனில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து நாம் எதற்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்ஐ'ல என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான பாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்கதக்கது.

'பயிற்சி செய்யுங்கள், இரவில் நேரத்திற்கு உறங்குங்கள். உரிய நேரத்திற்கு விழித்தெழுங்கள். அவர்கள் இப்போட்டியில் பாகிஸ்தானுக்காக தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்' என பாக். வீரர்களுக்கு அமைச்சர் மலிக் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் அணியினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் கூறியுள்ள கருத்தையும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் வரவேற்றுள்ளார்.

மொஹாலி போட்டிக்காக 1000 கொமான்டோ படையினரை ஈடுபடுத்தல் உட்பட கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிதம்பரம் கூறியிருந்தார்.

இந்நிலையில், "சிதம்பரத்திற்கு அதை செய்யும் ஆற்றல் உள்ளதென்பது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்" என்கிறார் ரெஹ்மான் மலிக்.
 


  Comments - 0

 • Thilak Monday, 28 March 2011 07:37 PM

  இம்ரான்கான் உலகக்கிண்ணத்தை இந்தியா வெல்லும் என்கிறார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஆட்டநிர்ணய சதி பீதி கிளப்புகிறார். பாகிஸ்தான் அணியை அவர்களின் நாட்டவர்களே உளவியல் ரீதியில் பலவீனப்படுத்துகிறார்கள்.

  Reply : 0       0

  xlntgson Monday, 28 March 2011 08:49 PM

  "காசேதான் கடவுளடா, அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா" தேசபக்தி என்ன விலை?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X