2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

இறுதிப்போட்டிக்கு தெரிவாகுவதற்கு இலங்கை அணிக்கு 218 ஓட்ட இலக்கு

Super User   / 2011 மார்ச் 29 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகுவதற்கு இலங்கை அணிக்கு அரையிறுதிப்போட்டியில் 218 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான அரையிறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து அணி 48.5 ஓவர்களுடன் 217 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அவ்வணியின் சார்பில் ஆகக்கூடுதலாக ஸ்கொட் ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சாளர்களில் அஜந்த மெண்டிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் முத்தையா முரளிதரன் ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .