2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்காக ஜனாதிபதி மும்பை செல்கிறார்

Super User   / 2011 மார்ச் 31 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளை மறுதினம் சனிக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மும்பை செல்லவுள்ளார்.

'இந்த உலகக் கிண்ண சுற்றுப்போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கான காணிக்கையாக உலகக் கிண்ணத்தை  நாம் வெல்ல வேண்டும் என ஜனாதிபதி விரும்புகிறார்' என ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியை ஜனாதிபதியும் அவரின் 3 புதல்வர்களும் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

அப்போட்டியின் பின்னர் இலங்கை அணியினருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, உலகக் கிண்ணத்தை வென்றுவருவதற்கு இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .