2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய அணிக்கு அபராதம்

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக சம்பியனான இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அபராதம் விதித்துள்ளது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கையுடனான இறுதிப்போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கத் தவறியமையே இதற்கான காரணமாகும்.

உரிய நேர அவகாசத்தில் இந்தியா ஒரு ஓவர் குறைவாக வீசியதை போட்டி மத்தியஸ்தரான நியூஸிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ஜெவ் குரொவ் கண்டறிந்தார்.

அதையடுத்து ஐ.சி.சி. விதிகளின்படி இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு போட்டிக்கான அவரின் ஊதியத்தில் 20 சதவீதமும் ஏனைய வீரர்களுக்கு அவர்களின் ஊதியத்தின் 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஐ.சி.சியின் இத்தீர்ப்பை இந்தியா ஆட்சேபிக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்திய அணி சம்பியனாகியதையடுத்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 225,000 டொலர் போனஸ் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .