2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘அலோசியஸ் தொடர்பில் தகவல் இல்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லையென, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த ​கோதாகொட, ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்று (06) கொண்டுவந்தார்.  

 திறைச்சேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல நாட்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், அவருடைய காரியாலயத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் சென்றிருந்தனர். எனினும், ஆணைக்குழு அதிகாரிகளின் முயற்சி கைகூடவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இந்நிலையில், அர்ஜுன் அலோசியஸிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, ஆணைக்குழுவின் முன்னிலையில், அவர் ஆஜராகுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X