2025 மே 14, புதன்கிழமை

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் இந்து சமுத்திரத்தில் இன்று (12) அதிகாலை 2.34 மணியளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.

10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கையும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மாத்தறை மற்றும் அம்பலன்கொட ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X