Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Nirosh / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வருடத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான யோசனையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோமென அறிவித்துள்ளது.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அதன் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அதிகாரத்தைக் கைப்பற்றுவது, தங்களது பிரதான இலக்கல்ல. வரவு – செலவுத் திட்டத்தை (பாதீட்டை) நாடாளுமன்றத் தேர்தலே, இந்நாட்டுக்கு அவசியமானதாகும்” என்றார்.
“எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி வைத்தாலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும்” என்றார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றபோதிலும், அதுவரையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்தால், நாடு முழுமையாக நாசம் செய்யப்படும் என்று தெரிவித்த அவர், ஆகவே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு யோசனையொன்று கொண்டுவரப்பட்டால், அதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
மேலும், புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கக் கூடாது என்று தெரிவித்த அவர், தமது ஆட்சியின்போது, 19ஆம் திருத்த சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவோம் எனவும் கூறினார்.
இதேவேளை, பாதாள உலகக் குழுவொன்றின் தலைவர் மாகந்துரே மதுஷ், டுபாய் நாட்டில் செய்த குற்றத்துக்கே, கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த அவர், அவருக்கெதிரான நடவடிக்கைகளை, அந்நாட்டு நீதிமன்றமே எடுக்குமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago